Tuesday, June 30, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்

யாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 805 மில்லிக்கிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments