Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாகாஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு

காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்களுக்கு பூட்டு

இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி யாரும்
எதிர்பாராத நிலையில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவ் கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான
லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால், ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலாத்தலங்களில் 48 தலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை தகவலை அடுத்து சுற்றுலாத்தலங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments