பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும்இன்று (29) காலை
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

