Saturday, July 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு

கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில்
தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின்
அபிவிருத்தி அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கலகெதர மினிகமுவவில் வசிக்கும் 33 வயதுடைய கிருஷாந்தி குமாரி
தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம் காரணமாகஇ சிகிச்சைக்காக
மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை
உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments