Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகள்

செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகள்

செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள்
ஆரம்பமாகியுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி
வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில்
அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து
மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய,  விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து,  பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்போது,  மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும்,
தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே,  அங்கு அகழ்வாய்வு தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடதக்கது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments