Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாஇலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த
இந்திய உயர்நீதிமன்றம்,  உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகள் தங்குவதற்கான
சத்திரம் இந்தியா அல்ல என, வாய்மொழியாகக் குறிப்பிட்டுள்ளதாக
இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 2015 ஆம்
ஆண்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிராகஇ 2018 ஆம் ஆண்டில்
சென்னை மேல் நீதிமன்றம் 7 வருடச் சிறைத்தண்டனையை விதித்தது.

குறித்த,  தண்டனைக் காலம் நிறைவடைந்ததும்இ உடனடியாக இந்தியாவை விட்டு
வெளியேறுமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன்,  அதனைச்
சவாலுக்கு உட்படுத்தி, குறித்த இலங்கையர் இந்திய உயர் நீதிமன்றில்
மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,  குறித்த நபர்
சட்டபூர்வமாக இந்தியா வந்தவர் என்றும்,  அவரது சொந்த நாட்டில் அவரது
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்இ சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளார்.

அதன்போதுஇ உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகளை இந்தியா வரவேற்க
வேண்டுமா என்றும், ஏற்கனவே 140 கோடி பேருடன் போராடி வருகின்ற இந்தியா,
வெளிநாட்டினரை மகிழ்விக்கக்கூடிய ஒரு சத்திரம் அல்ல எனவும் இந்திய
உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் தலைமை நீதியரசர் தீபங்கர் தத்தா
குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments