Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇலங்கை வங்கியின் அனைத்து கிளைகளின் சேவைகளும் இன்று முடக்கம்

இலங்கை வங்கியின் அனைத்து கிளைகளின் சேவைகளும் இன்று முடக்கம்

போனஸ் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து,  இன்று மதியம்முதல் இலங்கை வங்கி கிளை வலையமைப்பை மூடி,  அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கமைய,  தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,  எதிர்வரும்
ஜுன் 6ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி
ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து
தெரிவிக்கையில்,

‘கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச்
சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்ய முடிந்தது.

இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்பட உள்ள
அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன்
நடைபெற்ற கலந்துரையாடலின் போது,  பணம் தொடர்பாக இரண்டு
பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயல்படுத்த நிதியமைச்சு
இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில்
நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள்
தொடங்கப்படுகின்றன. என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments