கடந்த காலங்களைப் போன்று அரசியல் விளையாட்டுகளுக்கு இனியும்
இடமளிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காட்டிக் கொடுத்தவன் என்றார்கள். இன துரோகிகள் என்றார்கள் .
தமிழ் மக்களை கொன்றவர் என்றார்கள். கடந்த காலங்களில் முள்ளிவாய்க்காலில்
லட்சக்கணக்கான மக்களை ராஜபக்ச ஆட்சியில் கொன்று குவித்தவர்கள் என்றார்கள்.
பிரபாகரனை மற்றும் பிரபாகரனின் மகனை கொன்றவர்கள் தேசதுரோகி இன துரோகி என்றார்கள்.
அன்று அரசாங்கத்தோடு ஆட்சியில் இருந்த அமைச்சரவை அமைச்சர்களோ அன்று
அரசாங்கத்தோடு இருந்தவர்களோடு இன்று ஆட்சி அமைக்கிறார்கள். இவர்கள் வெறும் பதவிக்காகவும் ஆட்சிக்காகவே இவரது கால்களிலும் விழுகத் தயாராக உள்ளனர். இவர்களுக்கு வெட்கம் இல்லையா என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
வெட்கமில்லாத சூடு சொரணை இல்லாதவர்களோடு இன்று ஆட்சி அமைக்கிறார்கள்.
இவர்களே இணைந்து இன்று நகர சபையை ஆட்சி அமைக்கிறார்கள் .
யாழ் மாநகர சபையில் மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவார்கள் ஆயின்
தொடர்ந்து ஆட்சியில் இருப்பார்கள். இல்லையேல் எதிர்காலத்தில் இவர்கள்
இப்படி கூத்தாடுவார்களா இருந்தால் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் இது
தொடர்பாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் – என்றார்.

