Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்அமெரிக்காவை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவை தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி
கொடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் 80 பேரும்,  இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேலுக்கு
ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில்,  ‘
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து
தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்’ என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்காவை ஈரான்
தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஈரான்
சந்திக்க நேரிடும். ஈரான் மீதான தாக்குதலுக்கும்,  அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எந்த வகையிலும்,  வடிவிலும் ஈரான் தாக்கினால் அமெரிக்க ஆயுதப் படை முழு பலத்துடன் களமிறங்கும். இருப்பினும்,  ஈரானுக்கும்,  இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து,  இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments