Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும்
ஊழியர்கள் சிலர் இன்று (16) காலைஇ நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்றும்,  வழங்கப்படாத நிலுவை சம்பளத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கோரி,  நிறுவனத்தின் முக்கிய வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் நியமனம் பெற்ற இவ்வூழியர்கள்,
கடந்த ஒரு வருடமாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

தொடர்ந்து ஏமாற்றத்துடன் செயல்பட்டுவரும் நிர்வாகத்துக்கு எதிராகஇ எந்தவொரு நபரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாதவாறுஇ நிறுவன வாயிலை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள்,  நிறுவன
மேலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments