Tuesday, August 11, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் நீண்டகால மாவா விற்பனையாளர் கைது

யாழில் நீண்டகால மாவா விற்பனையாளர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவர்
நேற்று (22) கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா
கலந்த மாவாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் நீண்ட காலமாக
கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்
நீண்டகாலமாக மாவா விற்பனை செய்து வந்தமை தெரியவந்தது.

அதனையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக
விசாரணைகளின் பின்னர் அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments