Monday, September 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மஹரகம,  நாவின்ன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்
நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து,
மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு
பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதோடு,
மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments