Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகாணி வர்த்தமானியை இரத்து செய்து மக்களுடையதென உறுதி செய்யுங்கள்

காணி வர்த்தமானியை இரத்து செய்து மக்களுடையதென உறுதி செய்யுங்கள்

வலி வடக்கு காணி உரிமம் தொடர்பில் இலங்கை அரசால் 2013 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டு மக்களின்
காணி நிலங்கள் மக்களுக்குரியதென்பதை உறுதி செய்ய வேண்டும் என்று
மனித உரிமை செயற்பாட்டாளரும் குறித்த விடையத்தின் ஏற்பாட்டாளருமான
யே.யாட்சன் பிகிறாடோ வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்தின் பிடியிலுள்ள வலி வடக்கு காணிகளை விடுவிக்கக்கோரி, இன்று
காணிகளை இழந்த வலி வடக்கு மக்களினால் ஊடக சந்திப்பு ஒன்று
தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னமும் 2808 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை
பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது. ஆனால் யாழ.மாவட்டச் செயலகம் 2800 ஏக்கர்
நிலம் என்று தெரிவிக்கின்றது.

இவ்விரு அரச நிறுவனங்களும் முதலில் ஒரு சமநிலையில் தகவல் பதிவை கொண்டிருக்க வேண்டும். அதேவேளை மாவட்ட செயலர் எதேச்சத்தனமாக தகவல்களையும் வழங்கக் கூடாது.

இதேநேரம் 2013 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில்
6317 ஏக்கர் நிலம் இராணுவத்தின் பிடியில் இருப்பதாக என்று கூறியிருந்தது. அத்துடன் அவை அனைத்தும் அரச காணிகள் என்றும் தெரிவித்தது. இதேவேளை கடந்த ஆட்சியாளர்களால் பல ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டன.

அதேபோன்று வீதிகள்,  ஆலயங்கள் என்றும் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால்
இந்த வர்த்தமானியின் பிரகாரம் இன்னமும் அரச காணிகளாகவே மக்களின் காணிகள் இருக்கின்றன. எனவே குறித்த வர்த்தமானியை உடனடியாக இரத்து செய்யவேண்டும்.

இதற்கு இன்றைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்தால்
மட்டுமே மக்களின் காணி மக்களுக்குரியதாகும். இல்லையேல்
சட்டவிரோதமானவையாகவே இருக்கும்.

அதன்படி காணிகளை விடுவிப்பதுடன் இவ்வளவு காலமும் அக்காணிகளை வைத்து
விவசயம் உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்வதற்கான குத்தகை இழப்பீடும்
உரிய நபர்களுக்கு வழங்குவதுடன் வர்த்தமானியையும் இரத்துச்செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments