யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர்
நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயதுடைய செ.பிரசாந்தன்
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி
வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (19) மயக்தமடைந்த நிலையில் வீட்டில்
காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக
வைத்தியர்கள் தெரிவித்தனர்.

