Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழிற்கு வருகை தந்த சோஷலிசம் இளைஞர் சங்கம்

யாழிற்கு வருகை தந்த சோஷலிசம் இளைஞர் சங்கம்

சகோதரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று (23) சோஷலிசம் இளைஞர் சங்கம்
யாழ். தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை பயணத்தை ஆரம்பித்து
மதியம் யாழ். தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

குறித்த பயணத்தில் குருநாகல் புகையிரத நிலையம் மற்றும் அநுராதபுர புகையிரத
நிலையம் ஆகியவற்றில் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தவர்கள்,  யாழ்ப்பாண புகையிரத நிலைய நூலகத்திற்கு
ஒரு தொகுதி நூல்களை வழங்கி வைத்தனர்.

குறித்த குழுவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,  இளைஞர்
விவாகார பிரதி அமைச்சர் ஏரங்க குனசேகர, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

குறித்த வருகையின் நினைவாக மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டதை தொடர்ந்து,
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இருந்து ரிம்பர் மண்டபம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு,  அங்கு கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

நாளை (24) எழுவைதீவுக்கு பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 200 பனங்கன்று நடுகை செய்யப்படவுள்ளதுடன்,  எழுவைதீவு பாடசாலைக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள்,  மற்றும் தீவின் இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments