Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு

தாய், இரு பெண் குழந்தைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில்
அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து
இன்றைய தினம் தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

மேற்குறித்த பகுதியில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த
தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து
சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக இன்று
மீட்கப்பட்டுள்ளனர்

மேற்குறித்த பகுதியை சேர்ந்த தாயான 38 வயதுடைய உசாகரன் மாலினி மற்றும்
மகள்களான 11 வயதுடைய உசாகரன் மிக்சா,  நான்கு வயதுடைய
உசாகரன் சதுசா ஆகியோரை மேற்படி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றுடன் சில பொருட்கள்
காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில்
கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார்
கிணற்றில் உடல்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்

அதனை தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து
பார்வையிட்டதன் பின்னர் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட உடல்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று
பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்

இவர்கள் உயிர்மாய்த்துள்ளனரா அல்லது கொலையா என்பது தொடர்பில்
மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments