ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர்
ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி
கடந்த 28 ஆம் திகதி பிரித்தானியவில் ஈருருளிப்பயண போராட்டமொன்று
ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை நெதர்லாந்திலும் குறித்த ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தின் 4 ஆம் நாளான நேற்று (31) நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு
முன்பாக ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.
இந்நிலையில் குறித்த ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் பெல்ஜியம் எல்லையை
சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

