Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஆன்மிகம்தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தேர்த்திருவிழா

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த
மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி
நடைபெற்று வரும் நிலையில் நேற்று சப்பறத்திருவிழா இடம்பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று(4) துர்க்கை அம்மனின் தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இன்று காலை விசேட பூசைகள் இடம்பெற்று அம்மனுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் தேரில் பவனி வருவதற்கு வெளியில் பிரவேசித்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷத்துடன் அலங்கார வடிவில்
துர்க்கை அம்மன் தேரில் பவனி வந்தார்.

துர்க்கை அம்மன் தேரில் வலம் வரும் காட்சியைப் பார்க்க பல பாகங்களிலிருந்தும்
மக்கள் திரண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments