இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் அவரை
முன்னிலைப்படுத்திய போது இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்றையதினம் விசாரணை ஒன்றிற்காக இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில்
முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டார்.

