Wednesday, August 5, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் இருவர் கைது

மன்னாரில் சட்டவிரோத கடல் அட்டைகளுடன் இருவர் கைது

மன்னார் இழுப்புக்கடவாய் அந்தோனிபுரம் கடற்கரை பகுதியில் இலங்கை
கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது,
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கொண்டு சென்ற
இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பலான
புவனேக்க ஆயதனம் மேற்கொண்ட சோதனையின்போது,  சந்தேகத்திற்கிடமான
படகொன்று பரிசோதிக்கப்பட்டது. அப்போது,  அனுமதியின்றி கரைக்கு கொண்டு
வரப்பட்ட சுமார் 4,900 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இலுப்பக்கடவாய் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு மற்றும் ஏனைய உபகரணங்களுடன்
சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments