ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கஇ நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின்
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்
பதிவிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
‘ சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை,
நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள்
முழுமையாக நம்புகிறோம், என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

