அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு
அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட
இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி வீதியை மறித்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார்.இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
‘குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால்,
அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என எச்சரிக்கை
விடுத்தனர்.
பின்னர், தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,
போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு
மகஜரைக் கையளித்தனர்.