ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் கைது ஒருவர் சிறைச்சாலைக்குள்
கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாகவும் வசதியாகவும்
தங்கியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து,
இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தக் காணொளியில், குறித்த கைதி தனது கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டும், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் காட்சியுடன், மற்றொரு கைதி அவருக்குத் தலையை மசாஜ் செய்யும் காட்சியும் காணப்படுகின்றது.
இந்தக் காணொளியில் உள்ள கைதி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கமைய, இது குறித்துச் சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.

