கொழும்பில் இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து
விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் நேற்று கைது
செய்யப்பட்டனர்.
மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது
செய்யப்பட்டனர்.
போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான
மூன்று பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.

