நாடளாவிய ரீதியில் 7 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளின் மக்களை
உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (30) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், அடுத்த
24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.
இதன்படி, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும்
நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இந்த மண்சரிவு
அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

