யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே நீண்டகாலமாகத்
தகராறு இருந்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலின் போது,
அந்தப் பெண் குறித்த நபரின் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

