இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி 78 ஆவது சிரார்த்த தினம் இன்று
யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில்
போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள காந்தியின்
நினைவுத்தூபிக்கு இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி மலர் மாலை
அணிவித்து நினைவு கூர்ந்தார்.
வாழ்நாள் பேராசிரியர் மோகன்தாஸின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம், யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, கோப்பாய்
ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சொல்லருவி லலீசன்,
மறவன்புலவு சச்சிதானந்தம், காந்தி சேவா நிலைய அங்கத்தவர்கள்
, யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டிருந்தனர்.
இதன்போது காந்தி சேவா நிலையத்தினால் காந்தியவர்கள் யாழ்ப்பாணத்திற்கு
வருகை தந்ததை நினைவு கூர்ந்து வருடா வருடம் வெளியிடப்படும் காந்தியம்
பத்திரிகை இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

