Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02)
நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.

இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு
கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர்
இரா.சணக்கியன் மகஜர் ஒன்றை கையளித்தார்.

கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், இது சிறிய போராட்டமே,
எனினும் அரசாங்கம் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் பாரிய
விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இதன்போது சாணக்கியன்
நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தினார்.

இந்த எதிர்ப்புக் குரலை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும்
நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் இதன்போது மேலும் வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு
மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்திட்டம் அமையுள்ளது.

இதற்காக ஏற்கனவே மதிப்பிடப்பட்ட செலவு ரூ . 23, 456 மில்லியன் ஆக
திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி
2026 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க அமைச்சரவை
அனுமதி வழங்கியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments