Monday, May 4, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஇ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்

இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின்
சாரதி மீது,  அதே வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும்
நடத்துனர் ஆகியோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் இன்று (07) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் இ.போ.ச
டிப்போவின் தரைக்கால முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

டயகமவில் இருந்து காலை 6:30 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த குறித்த
பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதற்குப் பின்னால்
துரத்தி வந்த தனியார் பேருந்தின் சாரதி,  இ.போ.ச பேருந்தை வழிமறித்து,  சாரதி
ஆசனத்தின் கதவைத் திறந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து 5 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே லிந்துலை,  மெராயா நகருக்கு அருகில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சாரதியும் நடத்துனரும் இணைந்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

சாரதி தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் கையடக்கத் தொலைபேசி ஊடாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு
அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments