Wednesday, April 22, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை'புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்' : கையெழுத்து போராட்டம்

‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ : கையெழுத்து போராட்டம்

‘புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்கனவே
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும்,  இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து இன்றையதினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த
போராட்டம்,  இன்று யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் இல்லத்திலும்
முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தவத்திரு வேலன் சுவாமிகள்,  யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர்
அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார்,  ஏனைய மதகுருக்கள் குறித்த
சட்டங்களை எதிர்த்து கையொப்பமிட்டனர்.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் உடனிருந்தார்.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் புலம்பெயர் தேசங்களில்
வசிக்கின்ற உறவுகளும் கையொப்பமிடும் வகையில் இணைய வழி மூலமான
கையொப்பமிடும் வசதியும் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments