தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சூடுபிடித்துள்ள நிலையில்,
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) திமுகவில் இணைந்தது
மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜய்யின் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி
மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக
ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில்
இணையப் போகிறார் என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக அரசியல்
வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை
சந்தித்து திமுகவில் தன்னை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொண்டார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்இ ஓபிஎஸ்க்கு சால்வை அணிவித்து
வரவேற்றார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும்இ முக்கிய ஆதரவாளர்களும் திமுகவில்
இணைந்துள்ளனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபுவுடன் ஓ.பன்னீர்செல்வம்
ஒரே வாகனத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றது அரசியல்
வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.
திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு
வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் மீண்டும்
தனது சொந்த தொகுதியான போடி தொகுதியில் போட்டியிடலாம் என்ற
அரசியல் தகவல்களும் வெளியாகியுள்ளன.

