Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன்
தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

யாழ் நகரில் மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும்
கையடக்க தொலைபேசியை கொள்ளையடித்த ஒருவரும்,  நெடுங்குளம்
பகுதியில் வீடு உடைத்து நான்கரை இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இருவர்
உள்ளிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை கைது செய்ய
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்
11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments