இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 471 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 40 வது நாளான இன்று (22 )
4 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 11 மனித
எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில்
நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 471 மனித என்புத் தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 455 எலும்பு எச்சங்கள்
துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு
நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

