Monday, April 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமன்னாரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு

மன்னாரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு இன்று (28) மதியம் இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது பொது மக்கள்,  கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் தமிழரசு கட்சியின் பிரதேச சபை
உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக் கட்சி செயல்பாடுகள் மற்றும்
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை செயல்படுத்த உள்ளமை என்பது தொடர்பாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments