Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈரானிய போர்க்கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் தாக்கவில்லை

ஈரானிய போர்க்கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் தாக்கவில்லை

இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான
ஈரானிய போர்க்கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக
வெளியாகிய செய்திகள் முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை
ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் சி.டி.ஆர் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய கப்பல் விபத்து தொடர்பில் இலங்கை கடற்படை இன்று தொலைத்தொடர்பாடல் மையத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காலை 5 மணியளவில் எமக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய நாங்கள்
விபத்து நடந்த இடத்திற்குச் சென்றபோதுஇ ஒரு பெரிய எண்ணெய் படலத்தை
மாத்திரமே காண முடிந்தது. எனவே அந்தக் கப்பல் மூழ்கிவிட்டது. அப்போது
விரைந்து செயற்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டோம்.

அடிப்படையில் நாம் ஆபத்தில் சிக்கிய கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப்
பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். எமது எல்லைக்குள் எவ்வித
ஆபத்துக்கள் நேர்ந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை மீட்பது
எமது கடமை. அதையே நாம் செய்தோம்.

தற்போது இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது தாக்குதலா என்பது தொடர்பில்
விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து குறித்த கப்பலும்
ஒரு போர்க்கப்பல் என உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்,  போர்க் கப்பல் ஒரு
நீர்மூழ்க்கிக் கப்பலாம் தாக்கப்பட்டது என்ற செய்தி வெளியானது. அதை
நாம் முற்றிலும் எதிர்க்கின்றோம். விசாரணை நிறைவிலேயே நாம் எதையும்
உறுதி செய்ய முடியும். அதன் பின்னரே இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது
தொடர்பான விசாரணைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கையைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

ஈரான் போர் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் ஈரானிய கடற்படையினர்
என கூறிவிடமுடியாது. சிவிலியர்களும் இருக்கலாம். குறித்த இடத்தை அண்மித்த பகுதிகளிலிருந்து 32 பேர் பாதுகாப்பாக மீட்க்கபட்டுள்ளதுடன் கணக்கிடப்படாத சிலரின் சடலங்களும் மீட்கப்ட்டுள்ளன. அவர்கள் சிவிலியர்களாகவும் இருக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments