Sunday, August 9, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

ஈரானியர்களை திருப்பி அனுப்ப வேண்டாம்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

ஈரானியப் போர்க்கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையின் மனிதாபிமான உதவி குறித்த விவகாரத்தில் அமெரிக்கா தனது அழுத்தத்தைப் பிரயோகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச செய்தி முகமையான ‘ராய்ட்டர்ஸ்’ மற்றும் ஏனைய ஊடகங்களின்
தகவல்படி, இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா சில முக்கிய கோரிக்கைகளை
முன்வைத்துள்ளதாகத் தெரியவருகிறது:

இலங்கையின் காவலில் இருக்கும் ஈரானியப் பணியாளர்களைத் தற்போதைய
சூழலில் ஈரானுக்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா
வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய தரப்பினர்,  இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு
வீரர்களைத் தவறான பிரசார நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என்றும்,
அவ்வாறு நடக்காமல் இலங்கை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்
என்றும் அமெரிக்கா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம்,  இந்த
விவகாரத்தை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவே அணுகுவதாகத்
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கை இச்சூழ்நிலையில்,  சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நடுநிலையான போக்கைக் கடைப்பிடிக்க முயற்சி செய்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments