Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை கொள்ளை

யாழில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை கொள்ளை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு
ஒன்றில் இன்று அதிகாலை நகை கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1:00 மணியளவில் 3 திருடர்கள் மதிலால் பாய்ந்து குறித்த
வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த நபரைத் தாக்கிவிட்டு பின்னர் அவரின் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து சுமார் 5 பவுண் நகை அவரது கழுத்திலிருந்து அறுத்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு திருடர்கள் குறித்த பெண்ணையும் கணவனையும் அரை மணி நேரத்திற்கு மேலாக மணல் மண் அள்ளி கொட்டியும்,  இரும்பாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சுதாகரித்து கொண்ட கணவர் திருடன் ஒருவனை தாக்கியத்தில்
திருடன் காயத்துடன் இரத்தம் சிந்த சிந்த தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற சமயம் மருதங்கேணி பொலிஸார் மற்றும் அவசர இலக்கங்களான 119,  118 ஆகியவற்றிற்கு அழைப்பு மேற்கொண்டு உதவி கோரியும், பொலிஸார் 8 மணிநேரம் கழித்து சரியாக காலை 9:15 மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்கு முறைப்பாடு பெற்றுக்கொள்ள வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் நேற்றுடன் மூன்றாவது தடவையாக திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இதுதொடர்பான சிசிரிவி காணொளியும் தற்போது வெளிவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments