எரிபொருள் விலை அதிகரிப்பு அமெரிக்காவிற்குள் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அது நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெளிவான கருத்தாகும்.
இதன் காரணமாக, போர் சூழலால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையை
ஒரு தற்காலிக நிலைமை என விவரித்து ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைத்தளப்
பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
‘எரிபொருள் விலை உயர்வு குறுகிய காலமே நீடிக்கும். ஈரானின் அணுவாயுத
அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக
வீழ்ச்சியடையும். அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்காவும்
உலகமும் செய்ய வேண்டியது ஒரு சிறிய நிதித் தியாகம் மட்டுமே.
இதைப் பற்றி வேறுவிதமாகச் சிந்திப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமே’ என்று
ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

