எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தம்மை குற்றப்புலனாய்வு
திணைக்களம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளமைக்கு
எதிராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும்
சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை
விசாரிக்க திகதியிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை மூன்று பேர் கொண்ட
நீதியசர்கள் ஆயம் பரிசீலித்தது.
இதன்படி அந்த மனுவை எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு
உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்
பணிப்பாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்
பெயரிடப்பட்டுள்ளனர்.
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்
கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது
என்றும், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும்
தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

