Friday, August 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபலநாள் மீன்பிடி படகில் இருந்து 600 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் மீட்பு

பலநாள் மீன்பிடி படகில் இருந்து 600 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 600 கிலோவுக்கும்
அதிகமான போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த படகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்,  அதனுள் கணிசமான அளவு ஆயுதங்களும் பாதுகாப்புக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த படகு பொறுப்பேற்கப்பட்டது.

இதேவேளை,  கடந்த 7ஆம் திகதியும் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர்
மேற்கொண்ட சோதனையில் மற்றுமொரு படகு கைப்பற்றப்பட்டது. அது திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்ட போது,  அதனுள் 102 கிலோ ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன்,  அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments