Sunday, June 21, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்ஹமாஸ் அமைப்பு ஈரானிடம் விடுத்த கோரிக்கை

ஹமாஸ் அமைப்பு ஈரானிடம் விடுத்த கோரிக்கை

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு பாலஸ்தீனத்தில்
இயங்கும் ஹமாஸ் அமைப்பு ஈரானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன்,  இந்தப் போரை நிறுத்துவதற்கு தலையிடுமாறு அவர்கள் சர்வதேச அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலானது பிராந்திய அமைதிக்கும் உலக அமைதிக்கும் தடையாக அமையும் என ஹமாஸ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கா,  பிரித்தானியா மற்றும் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் ஹமாஸ்
அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments