Saturday, August 8, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்ற
வாள்வெட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர்
படுகாயமடைந்துள்ளார்.

பண்ணை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த
இளைஞரை, இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து
வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக
வெட்டியுள்ளது

படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடல்பகுதியில் விழுந்த நிலையில்
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்சென்ற நிலையில் சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments