Sunday, April 19, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஅமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  இன்று (19) முற்பகல் வெள்ளவத்தை,  அமரபுர மகா நிகாயவின் சங்க தலைமையகத்திற்குச் சென்று,  இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க வண,  கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

இங்கு,  மகா நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து,  அனைத்து எதிர்கால நடவடிக்கைகளும் வெற்றியடையவும் , வளமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்தித்து ஆசிர்வாதம் வழங்கினர்.

அமரபுர மகா சங்க சபையின் பதில் தலைவர் மாகால்லே நாகித நாயக்க தேரர்,
பதிவாளர் பலபிட்டியே சிறிசீவலி தேரர்,  பிரதிப் பதிவாளர் அஹங்கம மைத்திரி மூர்த்தி நாயக்க தேரர்,  உதவிப் பதிவாளர் ஹொரகல்லே சோரத தேரர்,  நிதஹஸ்கம கல்யாணசிறி தேரர்,  மஹமெவ்னாவே மங்கள தேரர் அவிசாவேல்லே தம்மாநந்த தேரர் உள்ளிட்ட அமரபுர மகா நிகாயவின் நாயக்க தேரர்கள் இந்நிகழ்வில்
கலந்துகொண்டதுடன்,  ஜனாதிபதி மகா நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கை அமரபுர மகா நிகாய நிர்வாக சபையின் தலைவர் தேசமான்ய அஜித டி சொய்சா,  பொருளாளர் தம்மிக சமரவிக்ரம உள்ளிட்ட நிர்வாக சபையின் உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments