Tuesday, April 21, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசெம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும்
27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது,  240 மனித எலும்புக்கூட்டு
எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 எலும்புக்கூட்டு
எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும்,  அதற்காக 08 வார கால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக மூன்றாம்
கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டதுடன்,
புதைகுழிக்குள் மழை வெள்ளமும் நிறைந்து காணப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு , செப்டெம்பர் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை,  27ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில்,
சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நாளை (22) யாழ். நீதவான் நீதிமன்றில்
கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments