Sunday, April 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதந்தை செல்வாவின் 49வது நினைவு தினம்

தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம்

திருகோணமலையில் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டக்கிழைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து
சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவு நிகழ்வில் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் நா. செல்வராஜா,  பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள்,  கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்
பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments