கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்தில் நேற்று (26) பிற்பகல் மூவர் நீராடியுள்ளனர்.
இதன்போது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அவரைத்
தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்று வந்த நிலையில்,
இன்று (27) காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களால்
அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது
இச்சம்பவத்தில் கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய
மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

