Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஏ.டி.எம் இயந்திரங்களை உடைக்க முயற்சி: பொதுமக்களின் உதவியை நாடியுள்ய பொலிஸார்

ஏ.டி.எம் இயந்திரங்களை உடைக்க முயற்சி: பொதுமக்களின் உதவியை நாடியுள்ய பொலிஸார்

ஹட்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை
உடைக்க முயன்ற சந்தேக நபரை கைது செய்ய,  ஹட்டன் குற்றப் புலனாய்வுப்
பொலிஸ் பிரிவு அதிகாரிகள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை
கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

நேற்று  அதிகாலை நேரத்தில் வங்கி கிளைக்கு வந்த சந்தேக நபர்,  இரண்டு
ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து பணத்தைத் திருட முயன்ற போது
அந்த முயற்சி தோல்வியடைந்த பிறகு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளார்.

வங்கி ஒழுங்குமுறை ஆணையம் சந்தேக நபர் இரண்டு ஏ.டி. எம் இயந்திரத்தை
உடைக்க முயன்றது தொடர்பான பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து,  ஹட்டன் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளனர் .

அதன்படிஇ சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 076 167 0258.
தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் நிஷாந்தா டி சில்வா கேட்டுக்கொள்கிறார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments