அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த
தகவல்களுக்கு அமைய இன்று (05) காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை சாரதி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தியை கைவிட்டு தப்பிச்சென்ற நிலையில் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

