Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தனியார் விடுதியொன்றுக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன்,  மோட்டார்
சைக்கிள் ஒன்று இன்று (6) முற்பகல் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச்
சேர்ந்த 21வயதுடைய இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments