Friday, May 15, 2026
https://thaaitv.com/
Homeபிரித்தானியாபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று பிரித்தானியாவின் Southall  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள்,  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு
உணவாக வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாறும் அதன்
மனிதாபிமானப் பின்னணியும் இந்நிகழ்வின் மூலம் நினைவுகூறப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அதன் உன்னதத்தைக் அடுத்த தலைமுறைக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில், விளக்கத் தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களிடம் .

இந்நிகழ்வு,  முள்ளிவாய்க்கால் நினைவுகளை உயிர்ப்புடன் பேணிக்காக்கும்
நோக்கிலும், தமிழீழ மக்களின் நீதிக்கான குரலை உலக மக்களிடம்
கொண்டு செல்லும் முயற்சியாகவும் அமைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments